Tue. Apr 16th, 2024

அடிமடி இழுவைப் படகு முறையையே தடை செய்யுங்கள்- எம்.கே.சிவாஜிலிங்கம்

அடிமடி முறையிலான இழுவைப் படகு முறையேயை தடை செய்ய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இழுவைப் படகு முறைதைத் தடை செய்யாமல் அடிமடி இழுவைப் படகு முறையையே தடைசெய்யுங்கள்.
5 மைல் தூரத்திற்குள் இந்திய இழுவைப் படகுகள் வருகை தருவதனால் எமது மீனவர்களின் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறன்றது. இதேபோலத்தான் உள்நாட்டில் இருப்பவர்களும் தமது இழுவைப் படகால் சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.எனவே தெளிவாகக் கூறினால் இலங்கையில் உள்ள அடிமடி இழுவைப் படகைக் கூட அனுமதிக்க முடியாது. இழுவைப் படகுகள் குறிப்படப்பட்ட தொலைவிற்கு அப்பால் தான் செயல்பட வேண்டும்.  நான் அன்று வடமாகாண சபையிலே  சொன்னதைத்தான் தற்போது அமைச்சரால் நெற்ரா, லாறா நிறுவனங்கள் குறிப்பிடப்பட்ட பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2017இல் இழுவைப் படகை தடைசெய்ய வேண்டும் எனக்கூறிய நல்லாட்சி அரசு ஏன் இன்னமும் அதனை அமுல்படுத்த முடியாமல் போனது.
எனவே இந்திய, இலங்கை அரசுகள் எல்லை தாண்டாது பாதுகாக்க வேண்டும். நவீன சாதனங்களை பயன்படுத்தி இரு மீனவர்களும் எல்லை தாண்டாமல் பாதுகாக்க முடியும். கரையோரப் பகுதியில் வந்து மீன்பிடிப்பதால் தான் தமிழீழ மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும்.நடுக்கடலிலே இவர்கள் இருவரையும் மோதவிடுகின்ற சதித் திட்டத்திற்கு நாம் ஆளாக முடியாது.
எனவே சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும்.
இலங்கை கடற்படையினரின் வெறியாட்டத்தினாலேயே இந்திய மீனவர் இறந்துள்ளார். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உரிய தரப்பினருக்கு நஸ்ட ஈடுகளைக் கொடுங்கள். குறிப்பிடப்பட சிலரில் மட்டும் பழி போடாது. உங்கள் எதிர்ப்புக்களை அரசின் மீது காட்டுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்