Sat. May 16th, 2026

அடிப்படை வசதிகள் இல்லாமல் முன்னேற்றம் காணும்  மூளாய் விக்ரோறி

அடிப்படை வசதிகள் இல்லாமல் முன்னேற்றம் காணும்  மூளாய் விக்ரோறி
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் பிரிவு 3 க்கான காலிறுதிப் போட்டியில் மூளாய் விக்டோரி விளையாட்டு கழக அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் அரையிறுதிக்கு  தகுதி பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாடு சங்கத்தின் பிரிவு 3ற்கான காலிறுதிப் போட்டி 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மூளாய் விக்ரோறி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து றைட்டோன் விளையாட்டுக் கழக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய றைட்டோன் அணி முதலில் துடுப்பெடுத்தாடி  38.4 ஓவர்களில்  சகல விக்கெட்டுகளையும்  இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் உதயசாந் 28,
திருமால் 24,சதீஸ்காந் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மூளாய் விக்ரோறி அணி சார்பில் பத்மப்பிரியன் 3, ஐங்கரன்,பிரணவன்,கதியோன் மூவரும் தலா 2     இலக்குகளையும்  கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மூளாய் விக்ரோறி அணி 37 ஓவர்களில்  7 விக்கெட்டுகளைமாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால்  வெற்றி பெற்றது. அவ்வணி சார்பில் அதிகபட்சமாக கதியோன்41, டானியல் 29, ஓட்டங்களையும்  பெற்றனர். பந்து வீச்சில் றைட்டோன் அணி சார்பில் ரவிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed