அடிக்கடி தடம்புரளும் ரயில்கள், களனிவெளியூடான ரயில் சேவையில் தாமதம்
அவிசாவளைக்கும் புவக்பிட்டியவுக்கும் இடையில் இன்று காலை தொடரூந்து ஒன்று தடம்புரண்டதன் காரணமாகவே தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்ட தொடரூந்தை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதுவரை களனிவெளியூடான தொடரூந்து சேவைகள் பாதிப்படையும் என்று ரயில்வே கட்டுப் பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுகிழமையும் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கு நோக்கி சென்ற புகையிரத்துமும் மஹாவா என்ற இடத்தில தடம்புரண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது