அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி திணைக்கள உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.இராஜசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் ஏ.பி.ஆர்.செளந்தரநாயகம், தோலகட்டி ஆச்சிரம மடாதிபதி அருட்தந்தை பி.அலன் நிர்மலதாஸ், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.யூ.பிரியந்த ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவி திருமதி சி.எஸ்.றிற்றா றோசலின், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் க.கனகராஜா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்