அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் முத்தமிழ் விழா
அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் முத்தமிழ் விழா நாளை புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலய தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.பூபாலசிங்கம், கெளரவ விருந்தினர்களாக கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி. சுகந்தி மகேஸ்வரதாசன், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி இந்திராணி குமரகுருபரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.