அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி 2 தங்கம் ஒரு வெண்கலம்
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட வலுதூக்கல் போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி இரு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
இலங்கை பாடசாலைகள் வலுதூக்கும் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட வலுதூக்கல் போட்டி இன்று கேகாலை ராஜகிரிய மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் புனித தெரேசாள் மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த டி.பிரகவி 16 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 84 கிலோ எடைப் பிரிவில் 204 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், எஸ்.நிதுஷா 63 கிலோ எடைப் பிரிவில் 203 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் அதே நிறைப் பிரிவில் பா.தாட்சாயினி 134 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.