அச்சுவேலியில் இனந்தெரியாத கும்பல் வீட்டின் மீது தாக்குதல் , கண்ணாடி , வாகனங்கள் சேதம்
அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்
இந்த தாக்குதல் இரவு 9 மணியளவில் நிகழ்ந்த பொழுது , வீட்டில் 3 பேர் இருந்ததாகவும் , அவர்கள் பயணத்தின் காரணமாக வீட்டை பூட்டியநிலையில் உள்ளே இருந்துள்ளார்கள். அவர்களின் தகவல் படி கன்டர் ரக வாகனத்தில் வந்து இறங்கிய கும்பல் ஒன்று உட்புகுந்த வீட்டின் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்
