அங்கஜன் பெயர்ப் பலகைக்கு தீ வைத்தவர் கைது

சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள அங்கஜன் இராமநாதன் அவர்களின் அலுவலக பெயர்ப் பலகைக்கு தீ வைத்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலீஸார் கைது செய்துள்ளனர்.
சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலை தருவாதாக கூறி ஏமாற்றியமைக்காகவே தாம் தீ வைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது உள்ள நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்பட்டமையால் கடும் தண்டனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.