Thu. Apr 24th, 2025

அக்டோபர் 15 இல் இருந்து பலாலி விமானநிலையத்தில் இருந்து விமானசேவை

பலாலி விமனநிலையத்தின் செயற்திட்டங்கள் குறித்து இன்று பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது . பிரதமருடன் , விமான போக்குவரத்துக்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். இதன் பொது விமனநிலையத்தி ஆரம்பிப்பதற்கு தேவையான அடிப்படை தேவைகள் மற்றும் செயற்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

போக்குவரத்துக்கு மற்றும் தண்ணீர் வசதிகள் குறித்தும்  தற்பொழுது மூடப்பட்டுள்ள பாதைகள் சிலவற்றை தீறப்பது குறித்தும் விவாதிக்கப்பட்து . மேலும் குடிநீர் வழங்குவதில் உள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்ய கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டமும் மேலும் வந்திறங்கும் விமானங்களுக்கு தொழிநுட்ப சேவைகளை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது பற்றியும் இதன் பொழுது ஆராயப்பட்டது .

மேலும் இந்த விமான சேவையை எதிர்பார்த்தபடி அக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதறகான நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்