அக்கரைப்பற்றில் T -56 துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் மீட்பு

T -56 துப்பாக்கி மற்றும் அதற்குரிய மகசின் தோட்டாக்கள், 30 வெடிமருந்துகள், ஏழு டெட்டனேட்டர்கள் மற்றும் நான்கு ஜெலட்னைட் குச்சிகள் என்பன பாலமுனை அக்கரைபற்று பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.பி. ருவன் குணசேகர தெரிவித்தார்.
இவற்றுடன் யூரியா, அம்மோனியா பசளை இரசாயன பொருட்களும் ஆயுதங்களுடன் புதைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
புலனாய்வு பிரிவிடமிருந்து கிடைத்த நம்பகமான தகவலைத் தொடர்ந்து ஒலுவில் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு காணியில் இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டநிலையில் அம்பாறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது