Sat. Apr 11th, 2026

அகிலதீபனின் ஹெற்றிக் கோலுடன் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி சம்பியன்

அகிலதீபனின் ஹெற்றிக் கோலுடன் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான ரட்ணசபாபதி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டி இன்று சனிக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முதல் பாதியாட்டத்தில் பல நிமிடங்கள் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் அகிலதீபன் மிக நேர்த்தியான கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இருப்பினும் ஆட்டம் நிறைவடைவதற்கு 5 நிமிடம் இருக்கும் போது நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் அகிலதீபன் அடுத்தடுத்து இரு கோல்களை பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed